Saturday 5 November 2016

மின் செலவை முற்றிலும் குறைத்திட

                                   மின் செலவை முற்றிலும் குறைத்திட 


           சூரியன் நமக்கு பல்வேறு வடிவங்களில் சக்தியை கொடுத்துவருகிறது. செடி கொடிகள், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதார சக்தி சூரியனில் இருந்துதான் கிடைகிறது. சுற்றுசூழலை மாசுபடுத்தாது. சூரிய சக்தியை பயன்படுத்தி நமக்கு தேவையான சுடுநீர் மற்றும் மின்சாரத்தை பெற்று பயனடையலாம்.

மின்சார உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. நவீன வாழ்கை முறையில் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயிப்பதே நாம் எவ்வளவு மின் சாதனங்களை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து அமைகிறது. வீடாகட்டும், கடைகளாகட்டும், கேளிக்கை இடங்களாகட்டும், எங்கும் எதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. தேவைக்கு ஏற்ற உற்பத்தி இல்லாததால் தட்டுப்பாடும் கட்டுப்பாடும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நமக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து நாமே உற்பத்தி செய்து உபயோகிப்பதன் மூலம் மின்சாரச் செலவை வெகுவாக குறைத்துக் கொள்ளலாம்.

வீடு, கடை மற்றும் பிற கட்டிடங்களின் கூறையில் அல்லது மொட்டை மாடிகளில் சூரிய ஒளி மின் தகடுகளை பொறுத்தி அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம். நம் கட்டத்தில் உள்ள மின் இணைப்பில் நெட் மீட்டரீங் கருவியை பொருத்திவிட்டால் பகலில் நம் தேவைக்குமேல் உற்பத்தியாகும் மின்சாரம் மின்வாரியத்திற்கு சென்றுவிடும். இரவில் மின்வாரிய மீட்டரில் இருந்து தேவையான மின்சாரம் கிடைக்கும். இதில் பேட்டரி பொருத்த வேண்டிய தேவை இல்லை. நடைமுறைச் செலவு எதுவும் கிடையாது. முதலில் இக்கருவியை அமைக்கும் செலவு மாத்திரம் தான். பிறகு எந்த செலவும் இல்லாமல் நமக்கு நிரந்திரமாக மின்சாரம் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். எந்த பாதிப்பும் இல்லாமல் 25 வருடங்கள் வரை மின்சாரம் கிடைக்கும். சூரிய வெளிச்சம் தான் வேண்டும் என்பதால் வருடம் 365 நாட்களும் மின்சாரம் உற்பதியகிக்கொண்டே இருக்கும். இச்சாதனம் நிரந்திரமாக மின்சாரம் கொடுக்கும் ஒரு காமதேனுதான். சூரிய ஒளி மின் தகடுகளுக்கு 25 வருடம் உத்திரவாதம் தருகிறோம். நம் உபயோகத்திற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் தேவை என்பதை பொருத்து 4 யூனிட், 8 யூனிட், 16 யூனிட் என்று இதன் அளவை நிர்ணயித்துகொல்ள்ளலாம்.

தற்சமயம், மின்வாரியம் இருமாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுத்து பில் கட்டச்சொல்கிறது. முதல் 100 யூனிட் இலவசம், 200 யூனிட் வரை ரூ.2, அதற்கு மேல் 500 யூனிட் வரை ரூ.3.60 என்றும் 500 யுனிட்டைத் தாண்டினால் ரூ.6.60 என்றும் வசுலிக்கப்படுகிறது. நடுத்தர குடும்பங்கள் மின் உபயோகத்தில் 500 யூனிட்டை தாண்டிவிடும் எனவே யூனிட்டுக்கு ரூ.6.60, அல்லது அதற்கு மேலும் கொடுகவேண்டியதிருக்கிறது. திட்டமிட்டு செயல்பட்டால் மின் செலவை கணிசமாக குறைக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ முடியும்.

சூரிய ஒளி மின்தகடுகளை பொருத்துவதற்கு மாநில மற்றும் மைய அரசுகள் மானியம் அளிக்கின்றன. வங்கிகள் கடன் கொடுத்து உதவுகின்றன. எனவே தாமதமின்றி விரைந்து செயல்பட்டு பயன்பெறுவீர்.

எங்களின் காட்சிசாலை முற்றிலும் சோலார் மின்தகடுகளின் மின்சாரம் மூலம் இயங்குகிறது. மேலும் எங்களின் நிரந்திர காட்சியகத்தில் மின் செலவினை சிக்கனத்தை கடைபிடிக்க, சூரிய ஒளி வெந்நீர்சாதனம், (LED) எல்.இ.டி. விளக்குகள் மற்றும் தானியங்கி சோலார் விளக்குகள் போன்ற கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. வருகை தந்து வாங்கி பயனடையுங்கள். எங்கள காட்சியம் கோவையில் வீசாட் சோலார் 21/1 திருவேங்கடசாமி ரோடு (கிழக்கு) ஆர்.எஸ்.புரத்தில் இருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண்கள் 
95781 48884 / 95782 48884 / 0422-2543401 
goo.gl/RMu0s5




No comments:

Post a Comment